என்னை கிண்டலடித்தவனை அண்ணனிடம் போட்டுக்கொடுத்தால்
அவனே தேவலாம்போல அப்படி கலாய்க்கிறான்.
அடிக்க கையோங்குகையில் கத்துகிறான்
“உன் மகளை மடியில வச்சி
காதுகுத்தும்போது கிள்ளுறேன் பாரு”
நான் மட்டுமென்ன சளைத்தவளா!
“போடா மூணாவது முடிச்சு போடுறப்போ உன்
பொண்டாட்டி சவுரிய பிடிச்சு இழுக்கலேன்னா கேளு”
சாவித்திரிகளும் சிவாஜிகணேசன்களும் திகிலானார்கள்.
————————————————-
பிரெண்ட்ஸ் படத்தை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் சொன்னேன்
“டேய் அண்ணா.. உன் பிரெண்ட் கூட ஸ்மார்ட் ஆ இருக்கான்டா “
கொஞ்சம் கூட யோசிக்காமல் சொல்கிறான் “செருப்பு பிஞ்சிரும்”
“உனக்கு மாப்ளைய நாங்க பாப்போம் நீ படிக்கிற வேலைய மட்டும் பாரு”
“எப்படி பட்ட மாப்ளே பாப்படா?” ஆர்வமாய் கேட்டால்,
“என் தங்கச்சிக்கு ஏத்த லூசுப்பயல தேட எனக்கு தெரியாதா?”
சொல்லிவிட்டு பரதேசம் போய்விட்டாய்.
இன்னும் லூசுப்பயல் வந்துசேரவில்லை.
அண்ணனிடம் யாரேனும் நினைவூட்டினால் தேவலை.
————————————————-
அதிகம் ஊட்டி செல்லம் கொடுப்பாள் அன்னை
அதிகம் பணம் திணித்து செல்லம் கொடுப்பார் தந்தை
அதிகம் சண்டை போட்டு செல்லம் கொடுப்பன் அண்ணன்
அண்ணனிடம் சண்டை போடும் தருணத்தை விட
அமைதியாயிருந்த தருணங்களே ரணம் தருகின்றன.
————————————————-
சின்ன வயதில் அஞ்சலி படம் பார்த்துவிட்டு அண்ணனென்றால் எனக்கு அப்படியோர் ஆசை.
எனக்கும் ஒரு அண்ணனிருந்து “டேய் அண்ணா” என அழைக்க வேண்டும், அவனிடம் சண்டை போட வேண்டும்,கிரிக்கெட் கற்றுக்கொள்ள வேண்டும் etc etc
ஆனால் அதுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.அப்புறம் வந்தான் என் அண்ணன், தோழனாக வந்தவன்,அக்கறையாலே அண்ணன் ஆனான்.அவனை நேரெதிரில் அண்ணன் என்று அழைத்த கணங்கள் மிகக்குறைவு, ஆனால் எல்லோரிடமும் அண்ணன் அண்ணன் என்று வாய் நிறைய சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வேன்.நான் தப்பு செய்யும்போது தலையை பிய்த்துக் கொள்ளாத குறையாக ரீடைரக்ட் செய்யப் பார்ப்பான்.என் எழுதும் பழக்கம் நாலு பேருக்கு தெரிய முக்கியக்காரணம் அவன், culturals head இடம் சண்டைபோட்டு வாய்ப்பு வாங்கிக்கொடுத்தான். என் முதல் பெரிய வெற்றியின்போது பக்கத்தில் இருந்து பெருமைப்பட்டவன்.என் சின்ன சறுக்கல்களையும் அழகாக புரிந்துகொண்டு ஆறுதல் சொல்பவன்.அண்ணா..அடுத்த பிறவியில் நான் உனக்கு உண்மையிலேயே தங்கையாய் பிறக்க வேண்டும்,அதுவும் ஒற்றை தங்கையாய் பிறக்க வேண்டும்.Happy Birthday Anna
November 3, 2010
பிறந்த நாள் வாழ்த்துகள்
Advertisement
1 Comment »
RSS feed for comments on this post. TrackBack URI

இந்த புன்னகைக் குறியில் அனைத்தும் புரியும் !
சட்டேன்று இலையிலிருந்து விழுந்த சிறு துளியால் மண்ணின் மனம் விரிந்தது போல என் மனதில் ஒரு மனம் !!
Comment by Ramesh — November 3, 2010 @ 6:17 am |